ஒரு காலத்துல, அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலோட அறிவாற்றலையும், அவரோட சமயோசித புத்தியையும் பார்த்து ரொம்பவே பிரமிச்சு போயிருந்தாரு. அதனால, ஒருநாள் காலையில, பீர்பாலோட திறமையை பாராட்டி, அவருக்கு நிறைய விலைமதிப்பற்ற பரிசுகளை கொடுக்கிறேன்னு வாக்கு கொடுத்தாரு.
ஆனா, நாட்கள் பல போச்சு, எந்த பரிசும் வரவே இல்லை. பீர்பாலுக்கு கொஞ்சம் வருத்தமா போச்சு. ஒருநாள், அக்பரும் பீர்பாலும் யமுனை நதிக்கரையில நடந்து போய்ட்டு இருக்கும்போது, ஒரு ஒட்டகம் போய்ட்டு இருந்துச்சு. அதைப் பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு. ‘பீர்பால், இந்த ஒட்டகத்தோட கழுத்து ஏன் இப்படி வளைஞ்சு இருக்கு?’ன்னு கேட்டாரு.
பீர்பால் ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு, ‘மன்னர் அவர்களே, அது ஒரு வாக்குறுதியை மறந்துட்டதால இருக்கலாம். புனித நூல்கள்ல, வாக்கு கொடுத்துட்டு அதை மீறினா, கழுத்து வளைஞ்சு போகும்னு சொல்லியிருக்காங்க. அதனாலதான் ஒட்டகத்தோட கழுத்து இப்படி வளைஞ்சு இருக்கோ என்னவோ’ன்னு சொன்னாரு.
உடனே அக்பருக்கு தன்னோட தப்பு புரிஞ்சு போச்சு. பீர்பாலுக்கு பரிசு கொடுக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டு, அதை நிறைவேத்தாம விட்டதை நினைச்சு அவருக்கு ரொம்ப வெட்கமா போச்சு. அரண்மனைக்கு போனதும், பீர்பாலுக்கு உரிய பரிசுகளை உடனே கொடுத்துட்டாரு. பாத்தீங்களா, பீர்பால் எப்பவுமே தனக்கு வேண்டியதை நேரடியா கேட்காமலே சாதிச்சுடுவாரு.”
ஓட்டகத்தின் கழுத்து ஏன் வளைந்துள்ளது