எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் இந்தப் புவிமண்டலத்தில் முன்னொரு காலத்தில் பேரரசன் ஒருவன் இந்தியா முதல் சீனம் வரை நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தான். அப் பேரரசனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் ஷாரியர், இளையவன் ஷாஜமான், இருவரும் தக்க வயதில் கல்வியும் போர்ப் பயிற்சியும் பெற்றனர். இருவரும் குதிரைச் சவாரியில் மிகத் தேர்ச்சி பெற்று விளங்கினர். கால வேகத்தில் பேரரசன் மாண்டான். சகோதரர் இருவரும் நாடாளத் தொடங்கினர். நாட்டின் வெகுதூரத்தில் உள்ள சாமர்கண்ட் நாட்டை இளையவன் ஷாஜமான் ஆண்டுகொண்டிருந்தான். சகோதரர் இருவரும் ஒருவருக்கொருவர் அன்புகொண்டு வாழ்ந்தனர். இவர்களின் நல்லாட்சியைக் கண்டு உலகமே வியந்தது. இப்படியே இருபது வருடங்கள் கடந்துவிட்டன. இந்த இருபது வருடங்களில் சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவேயில்லை. ஒரு நாள் மூத்தவன் ஷாரியர் தன் மந்திரியை அழைத்து வரச்செய்தான். தான் பல வருடங்களாகத் தன் தம்பியைப் பார்க்காதிருப்பது பற்றிக் கூறி, எப்படியும் உடனே பார்த்தாக வேண்டும் எனக் கூறினான். தம்பி ஷாஜமானை அழைத்து வந்து கோலாகலமாக விருந்துகள் நடத்தி ஒரு ஆறு மாத காலமாவது தன்னோடு இருக்கச் சொல்ல வேண்டும் என்று கூறினான். மந்திரியும் மன்னன் ஷாரியரை முழந்தாளிட்டு மும்முறை சிரம் தாழ்த்தி வணங்கி, “பேரரசரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்” என்றார். கடிதமெழுதுவோனை வரவழைத்துப் பட்டுத் துகிலில் அழைப்பைக் கவிதை நயம் சொட்ட எழுதச் சொன்னான் ஷாரியர். கடிதச் சுருளை மந்திரியிடம் கொடுத்து நாளையே புறப்பட சகல ஏற்பாடுகளும் செய்துகொள்ள உத்தரவிட்டார் மன்னர். மறுநாள் பொழுது புலரும் தருணம், பயண ஏற்பாடுகளோடு அரண்மனை மைதானத்தில் வந்துசேர்ந்தார் மந்திரி. அந்தக் காலைப்பொழுதில் மந்திரியை வழியனுப்பிவைக்கவும், தம்பி ஷாஜமானுக்குத் தக்க பரிசுப் பொருள்கள் கொடுத்தனுப்பவும் பேரரசர் ஷாரியரே அரண்மனை மைதானத்துக்கு வந்து விட்டார். மதிப்பிட முடியாத பொன்னும் மணியும், ஆபரணங்களாகவும் பல பெட்டிகளில் இட்டுப்பூட்டி பல ஒட்டகங்களின் மேல் ஏற்றப்பட்டன. அழகிற் சிறந்த அடிமைப் பெண்கள் பலர் பரிசாகப் பல பல்லக்குகளில் அவர்களைச் சுமந்து செல்ல நூற்றுக்கணக்கான கறுப்பு அடிமைகள். காற்றினும் கடுகிச் செல்லும் ஆற்றல் மிக்க நூற்றுக்கணக்கான குதிரைகள், அவைகளின் மேல்வேலும், வாளும், வில்லும் தரித்த போர் வீரர்கள் காவலுக்காக, இத்தனை ஆரவாரத்தோடு மந்திரியைத் தன் 1001 இரவுகள் www.t.me/tamilbookswbrid தம்பி நாடான சாமர்கண்ட் நோக்கி வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்தார் பேரரசர் ஷாரியர். மந்திரியும், மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் பயணம் செய்தான் பரிசுப் பொருள்களுடன். சென்ற வழியில் இருந்த பேரரசுக்குட்பட்ட மன்னர்கள் மேலும் பரிசுப் பொருள்களைக் கொடுத்துத் தக்க பாதுகாப்புடன் மந்திரியை வழியனுப்பினர். வழியில் காடுகள், மலைகள், கொடிய பாலைவனங்கள் அத்தனையும் கடந்து நான்காம் நாள் சாமர்கண்ட் சென்றடைந்தான். பேரரசன் ஷாரியரிடமிருந்து வந்திருப்பதாக மன்னர் ஷாஜமானுக்குத் தூதுவன் மூலம் மந்திரி தெரிவித்தான். மன்னரே நேரில் வந்து முகமன் கூறி மந்திரியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரண்மனையில் மந்திரியும், பரிவாரங்களும் ஆரவாரத்துடன் உபசரிக்கப்பட்டனர். மறுநாள் சாமர்கண்டில் மன்னன் ஷாஜமானின் அரசவை கூடிற்று. மன்னர் மன்னன் ஷாரியர் கொடுத்தனுப்பிய கடிதச் சுருளை மும்முறை சிரம் தாழ்த்தி வணங்கி, அரசவையில் மந்திரி ஷாஜமானிடம் கொடுத்தார். மன்னர் ஷாஜமான், கடிதம் வாசிப்போனை அழைத்துக் கடிதத்தைச் சபையறிய சொன்னான். வாசிக்கச் அன்பும் அருளும் மிக்க அல்லாவின் திருப்பெயரை வாழ்த்தி கடிதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அனுப்பியுள்ள பரிசுப் பொருள்களை ஏற்றுக் கொள்ளுமாறு ஷாரியர் கேட்டுக் கொண்டிருந்தார். தன்னை உடனே வந்து பார்க்க வேண்டும் என்ற தன் அவாவை நயம்பட எழுதியிருந்தார் ஷாரியர் சபையறிய வாசிக்கப்பட்ட கடிதத்தின் செய்தியைக் கேட்ட ஷாஜமானின் மந்திரிப் பிரதானிகள் அனைவரும் “தங்கள் தமையனார் ஷாரியரை நீங்கள் உடனே சென்று கண்டு வருக” என வேண்டினர். மூன்று நாட்கள் சாமர்கண்டில் அழைக்க வந்திருந்த மந்திரிக்குப் பெரு விருந்துகள் கோலாகலமாய் நடந்தன. நான்காம் நாள் காலையில் மன்னர் ஷாஜமான் தன் அரசாட்சியைத் தன் மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அண்ணன் அனுப்பிய பரிசுப் பொருள்களைப்போல் பன்மடங்குடன் பயணப்பட்டான். கூடாரங்கள், ஒட்டகங்கள் பரிவாரங்கள், அடிமைகள் ஆகியோரை முன்னதாகச் செல்லும்படியாக உத்தரவிட்டு எல்லோரும்திட்டப்படி பயணம் செய்தனர். பரிவாரங்களோடு நகர எல்லையைக்கூட இன்னும் தாண்டவில்லை மன்னன் ஷாஜமான். தன் அண்ணன் ஷாரியருக்கு மிக விலையுயர்ந்த ரத்தினம் ஒன்றைப் பரிசளிக்கத் தன் படுக்கையறையில் வைத்திருந்ததை எடுத்துவர மறந்துவிட்டான் ஷாஜமான். பரிவாரங்களை முன்னே தன் கொண்டிருக்கக் கட்டளையிட்டு சென்று விட்டுத் தன்னந்தனியனாய் குதிரையை மிக வேகமாகச் செலுத்திக் கொண்டு கோட்டை வாயிலை அணுகினான் ஷாஜமான். மன்னர் மட்டும் தனியே குதிரையில் வருவதைக் கண்ட கோட்டைக் காவலாளி, மன்னன் வரும் திசை நோக்கி முழந்தாளிட்டு வணங்கி, எழுந்திருந்து அவசர அவசரமாய்க் கோட்டைக் கதவை விரியத் திறந்து விட்டான். காம்பீர்யமே உருவமாகக் கொண்ட மன்னன் ஷாஜமான் குதிரையினின்றும் இறங்கி அரண்மனையினுள் நுழைந்தான். அந்தப்புரம் நோக்கி விரைந்தான். கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. தன் படுக்கையறையை நோக்கிச் சென்றான் மன்னன். பள்ளியறையினுள் நுழைந்த ஷாஜமான் பேயறைந்தவன் போல் அதிர்ச்சியால் மேலும் ஓரடியும் எடுத்து வைக்காமல் பிரமை பிடித்துப் போய் நின்றான். மன்னனை பேரதிர்ச்சி கொள்ளச் செய்ததுதான் என்ன? அவன் கண்கள் இருண்டன. அண்ட சராசரங்களும் தறிகெட்டுச்சுழல்வது போலிருந்தது மன்னன் ஷாஜமானுக்கு அவன் உடலில் ஓடிய ரத்தம் கொதிப்படைந்தது மாவீரனான அவன் தன் இடது கரத்தால் தன் கண்களை மறைத்துக்கொண்டு ‘அல்லா-அல்லா’ என்று கதறினான். கீழே சாய்ந்துவிடாமல் இருக்க நிலைப்படியில் சற்று சாய்ந்துகொண்டான். மன்னன் ஷாஜமானை காலனுக்கும் அஞ்சாத அந்தப் பெருவீரனை உலுக்கிய அந்தக் கொடிய காட்சிதான் என்ன? ஷாஜமானின் பேரன்புக்குப் பாத்திரமான அரசி பேரழகி – அவள் மஞ்சத்திலே தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருக்கிறாள். எப்படித் தூங்கிக்கொண்டி ருக்கிறாள்? பாக்தாத் நகர அடிமைச் சந்தையில் பத்து தினார் பொன்னுக்கு வாங்கிய கறுப்பு ஆப்ரிக்க அடிமை இட்ட இழி-வேலைகளைச் செய்யும் அற்பப் பதர் கறுப்பு நாய். அவன் மார்பிலே தன் எழில் கொஞ்சும் முகத்தைப் புதைத்துக் கொண்டு, அவனைச் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு தூங்குகிறாள்- அந்த அடிமைநாயும் மெய்மறந்து தூங்குகிறான். இந்தக் கோரக் காட்சியைத்தான் மன்னன் ஷாஜமான் பார்க்க நேரிட்டது. சில வினாடிகளில் மன்னன் நிதானத்துக்கு வந்தான். வெறிகொண்ட ஷாஜமான் தன் வாளையுருவி, ஒரே வீச்சில் இருவரையும் வெட்டி யெறிந்தான். வெட்டுண்டு தனியே விழுந்த இருதலைகளும் பரிதாபமாகத் துடித்தன. அப்போதும் ஷாஜமானுக்கு வெறியடங்கவில்லை. தலையற்ற இரு முண்டங்களையும் பல துண்டுகளாக வெட்டியெறிந்தான். பின்னர் கைதட்டி ஏவலாளர்களை அழைத்தான். வந்த ஏவலாட்கள் மன்னரின் வெறியையும், அறையினுள் கிடந்த சதைப் பிண்டங்களையும் கண்டு நடுங்கினர். குறிப்புணர்ந்த ஏவலர்கள் மாமிசப் பிண்டங்களைக் கண நேரத்தில் அகற்றி அறையைச் சுத்தம் செய்தனர். சிறிது நேரத்தில் ஷாஜமான் நிதானத்துக்கு வந்தான். கைகால்களைக் கழுவிக் கொண்டு மேற்றிசை நோக்கி முழந்தாளிட்டு, மனமுருகி அல்லாவைக் கூவியழைத்துத் தன்னை மன்னிக்கும்படி பிரார்த்தித்தான். பிறகு எழுந்து, தான் மறந்து வைத்து விட்டுப்போன பரிசுப் பேழையை எடுத்துக் கொண்டு, மீண்டும் குதிரையேறி பயணம் செய்து தன் பரிவாரங்களோடு சேர்ந்துகொண்டான். எனினும், மன்னன் ஷாஜமான் முகம் சோர்ந்து, உற்சாகமிழந்தவனாய் எந்தக் கேளிக்கைகளிலும் கலந்து கொள்ளாமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். நான்காம் நாள் மாலைப் பொழுதில் அண்ணன் ஷாரியரின் தலைநகரையடைந்தான் ஷாஜமான். அரசருக் கெல்லாம் அரசரான ஷாரியர் தன் தம்பியை எதிர்கொண்டழைக்கத் தானே நேரில் வந்து பெரும் ஆரவாரத்தோடு தம்பியை ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்து சென்றார். நகரெங்கும் சகோதரர் இருவரையும் மக்கள் வாழ்த்தி வணங்கினர். எங்கும் கூத்தும் கோலாகலமுமாய் இருந்தது. அரண்மனை முழுவதும் தீபாலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. இரவு நகரமக்கள் அனைவருக்குமாக, யாரும் கண்டும், கேட்டுமிராத அளவில் பெரு விருந்து நடந்தது. தம்பி ஷாஜமான் எதிலும் விருப்பம் கொள்ளாமல் சோர்ந்துபோய் இருப்பதை ஷாரியர் கண்டார். வழிப்பயணக் களைப்பால் சோர்வாய் இருக்கலாம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டார். மருநாளும் பகலெல்லாம் விருந்து மயம், எனினும் ஷாஜமான் விரும்பிப் பருகும் மதுவைக்கூடத் தொடவில்லை. எப்போதும் உற்சாகமே வடிவாய்ச் சிரித்துப்பேசி மற்றவர்களையும் சிரிக்கவைக்கும் ஷாஜமான் சோர்வுற்று, முகவாட்டத்துடன் இருப்பது ஷாரியருக்கு என்னவோபோலிருந்தது. இதைக் கண்ட பேரரசன் ஷாரியர் தன் தம்பியை நோக்கி வாட்டமுற்றிருப்பதின் காரணத்தைக் கேட்டார். இதற்குமேல் ஷாஜமானால் பொறுமையாய் இருக்கமுடியவில்லை. அண்ணா என்று கதறிக் கேவினான். தம்பி விம்முவதைக் கண்ட ஷாரியர், விருந்தில் யாரும் கவனிக்காத வண்ணம், ஷாஜமானை அணைத்து அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். சகோதரபாசம் பீறிட்டெழ ‘தம்பி! உனக்கு ஏற்பட்ட துயரமென்ன? என் உயிரைக் கொடுத்தேனும் உன் துயரைத் தீர்ப்பேன்… கூசாமல் சொல். இது அல்லா மீது ஆணை” என்றார். மனதைத் தேற்றிக்கொண்ட ஷாஜமான், “அண்ணா! உங்கள் சகோதர பாசத்தைக் கண்டுகளித்த எனக்கு ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரே அது” என்று சொல்லி நம்பவைத்தான். விருந்தும், கோலாகல கேளிக்கைகளும் பல நாட்கள் தொடர்ந்து நடந்தன. எனினும் ஷாஜமான் எதிலும் விருப்பம் கொள்ளாது இருந்ததை அண்ணன் ஷாரியர் உணராமலில்லை. தம்பி ஷாஜமான் வேட்டைப் பிரியன். குதிரையேறி விலங்குகளைத் துரத்திக் குறி தவறாமல் ஈட்டியெறிந்து கொல்வதில் வல்லவன். வானத்தில் விர்ரென்று பறந்து செல்லும் பறவையையும் குறிதவறாமல் அம்பெய்து வீழ்த்தும் வல்லமை கொண்ட வில்லாளி. ஆகவே வேட்டைக்கு ஏற்பாடு செய்தால் ஒருக்கால் மனம் தேறலாம் என்றெண்ணிய அண்ணன் மாமன்னன் ஷாரியர் நாளை காலையில் வேட்டைக்கு மன்னர் இருவரும் செல்வதாக, நகரெங்கும் முரசடிக்கச் செய்தான்.
மறுநாள் காலையில் வேட்டையில் தேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களோடு அரண்மனை மைதானம் வந்து சேர்ந்தனர். மாமன்னர் ஷாரியரின் வேட்டைக் கழுகுகளுடன் அடிமைகளும் வந்துவிட்டனர். மன்னரின் வேட்டைக் கழுகுகள் சீறிப் பறந்து ஒரு பெரிய மானைக்கூட கொத்திக் கிழிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. அக்கழுகுகளை அவ்வாறு பழக்கியிருந்தார் மாமன்னர் ஷாரியர். பேரரசர் ஷாரியர் தன் தம்பியை – ஷாஜமானை நேரில் சென்று வேட்டைக்கு வருமாறு அழைத்தார். சோர்வுற்றிருந்த ஷாஜமான் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தனக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று வேட்டைக்கு வர முடியாததற்கு வருந்தியும், நாளை வேட்டையில் கலந்து கொள்வதாகவும் சமாதானம் சொல்லி அண்ணன் ஷாரியரை மட்டும்சோர்ந்துபோய் நடந்துபோன அவமானகரமான சம்பவத்தை எண்ணி துக்கப்பட்டுக் கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டான். ஷாஜமான் வேட்டையில் கலந்து கொள்ளாதது அரண்மனையில் உள்ள யாருக்கும் தெரியாது. சகோதரர் இருவருமே வேட்டைக்குச் சென்றிருப்பதாக அரண்மனையில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டனர். பல நாழிகைகள் சென்றன. பொழுது போகாத ஷாஜமான் தன் அறையின் ஜன்னலருகே நின்று அரண்மனையை அடுத்த அந்தப்புர நந்தவனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அந்தப்புரப் பூங்காவின் வாயில் திறக்கப்பட்டது. அன்பே மெசூத் ஓடிவா! சற்று நேரத்துக்கெல்லாம் பல கறுப்பு இளம் ஆப்பிரிக்க அடிமைகள் நந்தவனத்தில் நுழைந்தனர். அந்தப்புரப் பூங்காவிலே ஆண்களா? ஆச்சரியப் பட்டு போனான் மன்னன் ஷாஜமான். மீண்டும் சற்று நேரத்தில் அடிமைப் பெண்கள் ஓடி வந்தனர். வந்தவர்கள் தங்கள் உடைகளையெல்லாம் களைத்தெறிந்தனர். ஆண் அடிமைகளும் ஆடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாக நின்றனர். காம வெறி பிடித்த பெண்கள் பெண்கள் ஆளுக்கொரு கறுப்பு அடிமையை இழுத்துக்கொண்டு ஜோடியாய் ஓடினர். மூலைக்கொரு சற்று நேரத்தில் பேரழுகு வாய்ந்த தன் அண்ணியார் நிர்வாணமாக பொங்கி நீர் ஊற்றருகே வந்து “ஓ மெசூத், ஓ! மெசூத் எங்கேயிருக்கிறாய்? உடனே ஓடிவந்து அணைத்து எனக்கு இன்பம் தா!” என்று கூவினாள். தடியனான ஒரு முரட்டு அடிமை ஓடி வந்து அவளை அப்படியே தூக்கி அணைத்து ஒரு செடி மறைவுக்கு ஓடினான். நந்தவனம் முழுவதும் ஒரே காம லீலா வினோதங்கள்! இந்த ஆபாசக் காட்சியை ஜன்னலருகே நின்று கண்ட ஷாஜமானுக்குப் பேரதிர்ச்சியாய் இருந்தது. சாமர்கண்டில் தான் பயணம் கிளம்பிய சில நாழிகைகளிலேயே தன் மனைவியின் காமக் களியாட்டதைக் கண்டு வெகுண்ட ஷாஜமான் செய்வதறியாது திணறினான். தன் மனைவிதான் அங்கு இப்படிக் கேவலமாய் நடந்து கொண்டாள் என்றால், இங்கேயும் அண்ணன் அரண்மனையிலும். .. ! சே! கேவலம். பெண்களாப் பிறந்தஅத்தனைபேரும் இப்படித்தானா? அன்பு காட்டுவது, காதலிப்பது என்பதெல்லாம் பெண்களின் போலி விளையாட்டுகள்தானா? எல்லாம் போலி பசப்பல்கள்! காணக் கூச்சப்பட்டு மீண்டும் சென்று தன் படுக்கையில் படுத்துக்கொண்டான் ஷாஜமான். மாலைப் பொழுதாயிற்று. வேட்டையிலிருந்து அண்ணன் ஷாரியர் திரும்பினான். இரவு கோலாகலமாய் விருந்தும் கேளிக்கைகளும், ஆடல் பாடல்களும் நடந்தன. எங்கும் மதுவெள்ளமாய்ப் பாய்ந்தது. மயங்கிச் சாயும்வரை விருந்தில் கலந்து கொண்டவர்கள் மதுவில் மூழ்கினர். ‘எங்கும் இதே கதைதான்’ என்று மனம் தேறிய ஷாஜமான் அன்றிரவு நடந்த விருந்திலே தாராளமாய்க் கலந்து கொண்டு, மனம் போனபடி மது குடித்து மயங்கிச் சாய்ந்தான். சற்று நிதானத்திலிருந்த அண்ணன் ஷாரியர், தம்பியின் செய்கையைக் கவனிக்கத் தவறவில்லை. பல நாள்களாய்ச் சோகத்திலேயே மூழ்கிக் கிடந்தவன் இப்படித் திடீரென மனம் மாறி விருந்தில் முழுதுமாய்க் கலந்து கொண்டதைக் கண்டு சந்தேகம் கொண்டான். எனவே தம்பியைத் தனியே அழைத்து விசாரிக்கத் தொடங்கினான். தோட்டத்தின் ஓரத்தில் ஒரு கற்பலகையின் மேல் இருவரும் அமர்ந்து பேசினர். மது போதையின் மயக்கத்தில் தம்பி ஷாஜமான் தன் மனைவி நெறிகெட்டு நடந்ததையும், தான் அவளை வெட்டி வீழ்த்தி விட்டு வந்ததையும் கூறினான். அதனாலேயே தான் சோகமாய் இருந்ததாகவும் கூறினான். மேலும் இங்கேயும் அரண்மனையில் அண்ணியார் -பேரரசியர் நந்தவனத்தில் மெசூத் என்ற அடிமையோடு நடந்து கொண்டதையும் உளறிவிட்டான். எங்கும் பெண்கள் அனைவரும் மோசக்காரிகளே என்று மனந்தெளிந்து தான்விருந்தில் கலந்து கொண்டதாகவும் உண்மையைச் சொல்லி விட்டான். மன்னாதி மன்னன் ஷாரியருக்குப் பேரதிர்ச்சியாய் இருந்தது. தம்பி போதையில் மதுமயக்கத்தில் உளறுகிறானோ என்றுகூட சந்தேகப்பட்டார். அண்ணன் சந்தேகப்படுகிறார் என்பதையறிந்த ஷாஜமான் மும்முறை அல்லாவின் மீது ஆணையிட்டு நடந்தது அனைத்தும் உண்மையென்றான். திகைத்துப்போன ஷாரியர், தம்பி! என் மனைவி- உத்தமி. நான் சாப்பிடாமல் அவள் தண்ணீர் கூட அருந்த மாட்டாளே! என் மீது உயிரையே வைத்திருக்கிறாளே! இதை நான் எப்படி நம்புவேன்!” என்று கூறினார். எல்லாம் வல்ல அல்லாவே! இது பொய்யாக இருக்க வேண்டும் என்று மனதார நினைத்தார். அண்ணாவின் திகைப்பைக் கண்ட ஷாஜமான் “அண்ணா! இதற்கு ஒரு சோதனை வைப்போம். நாளையும் வேட்டை உண்டென்று அறிவித்துவிடுங்கள். நாம் இருவரும், அனைவரும் அறிய வேட்டைக்குச் செல்வோம். சென்ற கொஞ்சநேரத்தில் மாறு வேடத்தில் அரண்மனைக்கு வந்து என் அறையில் வந்து தங்குவோம். நான் தங்கள் கண்ணெதிரிலேயே அரசியார் செய்யும் துரோகத்தைக் காட்டுகிறேன்” என்றான். அரசரும் இதற்கு உடன்பட்டார். மறுநாள் காலையில் சகோதரர்கள் இருவரும் கோலாகலமாய் வேட்டைக்குக் கிளம்பினர். வெகுதூரம் சென்றதும், தாங்கள் தங்க ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டனர். உடனே ஒரு பட்டுக் கூடாரம் அமைக்கப்பட்டுத் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டு நடுவில் ரத்தினக் கம்பளமும் விரிக்கப்பட்டது. வேட்டைப் பரிவாரங்களை வேட்டைக்குச் செல்லுமாறு ஆணையிட்டுவிட்டு தாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் வேட்டையில் கலந்து கொள்வதாகக் கூறினார். சகோதரர்கள் இருவரையும் தனியே விட்டுப் பரிவாரங்கள் வேட்டைக்குச் சென்றுவிட்டன. பின்னர் இருவரும் ஏழைப் பக்கீர்கள் போல் வேடமணிந்து கொண்டு இரண்டு குதிரைகள் மேல் ஏறி நகர எல்லையை அடைந்தனர். அங்கே குதிரைகளை விட்டிறங்கி கால் நடையாக கோட்டை வாயிலையடைந்தனர். எதிர்ப்பட்ட எவரும் இவர்களை இன்னாரென்று அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. கோட்டைக் காவலாளி இவர்களை உள்ளே விட மறுத்தான்; பின்னர் வேறு வழியின்றி அவன் மட்டும் பார்க்குமாறு தன் முத்திரை மோதிரத்தைக் காவலாளிக்குக் காட்டினார் ஷாரியர். முத்திரை மோதிரத்தைக் கண்ட காவலாளி அலறித்துடித்து, வந்திருப்பவர் மாறுவேடத்தில் உள்ள மன்னரே என்பதை உணர்ந்து மரியாதையாய் உள்ளே செல்ல அனுமதித்தான். இது ராஜாங்க விஷயமாதலால் காவலன் இதுபற்றி யாருக்கும் மூச்சே விடவில்லை. இரண்டு பக்கீர்களும் அரண்மனை அந்தப்புரம் பக்கம் சென்றனர். அந்தப்புர வாயில் விரியத் திறந்து கிடந்தது. காவலுக்கு யாரையுமே காணோம்.இதுதான் தருணமென பக்கீர்கள் வேடத்திலிருந்த சகோதரர்கள் இருவரும் உள்ளே நுழைந்து-ஷாஜமான் தங்கியிருந்த அந்த அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டனர். ஷாஜமான் திரையை விலக்கி நந்தவனத்தை நோக்கினான். ஒரே அமைதியாய் இருந்தது. ஷாரியரும் வந்து பார்த்தார். அசம்பாவிதமாக எதுவுமே இல்லை. “தம்பி! பார்த்தாயா ஒன்றுமே நீ சொன்னது போல் நடைபெறவில்லை. நேற்று நீ மதுவை அளவுக்கு மீறிக் குடித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்” என்று நையாண்டி செய்தார் ஷாரியர். “சத்தியமாக எல்லாம் வல்ல அல்லாவின் மீது ஆணையாக நான் பார்த்த அனைத்தும் உண்மையே” என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொன்னான் ஷாஜமான். எதற்கும் சற்று நேரம் பொறுத்துப் பார்க்கலாம் என்று கூறினான் தம்பி. சொன்னதை ஷாரியரும் ஒப்புக் கொண்டார். சகோதரர் இருவரும் வைத்தகண் வாங்காமல் நந்தவனத்தின் வாயிலையே கவனித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்துக்கெல்லாம் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. கறுப்பு அடிமைகளும் சேடிப் பெண்களுமாகத் திமுதிமுவென ஓடி வந்தனர். ராணியும் வந்தாள்; அவள் காதலன் ‘மெசூத்’தும் வந்தான். நேற்றைய தினம் போலவே காமக் களியாட்டம் தொடங்கிவிட்டது. இதைக் கண்ட ஷாரியர் துடிதுடித்துப் போனார். எனினும் விவேகியான அவர் உணர்ச்சி வசப்படாமல் தம்பியை அழைத்துக் கொண்டு யாரும் அறியாமல் மீண்டும் காட்டுக்கே சென்றுவிட்டார். பின்னர் அவர்கள் பக்கிரி வேடத்தையும் களைந்தனர். யாரும் சந்தேகப்படாத வகையில் சகோதரர் இருவரும் வேட்டையில் கலந்து கொண்டனர். மாலைப் பொழுதில் அரண்மனை திரும்பினர். இரவும் கோலாகல விருந்து நடந்தது. ராணி ஏதுமே நடவாததுபோல் வழக்கம் போல் மன்னர் ஷாரியருடன் உறவாட வந்தாள். காதல் மொழிபேசிப் பசப்பினாள். ஷாரியருக்கு உடலெல்லாம் கொதித்தது. உள்ளம் எரிந்தது. எனினும் உணர்ச்சியை அடக்கிக் கொண்டார். “அன்புமிக்க தம்பி! நம்மைவிடத் துரதிர்ஷ்டம் பிடித்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அரண்மனை வாசமே ஆபாசம் மிக்கது. எனக்கு இந்த உலகமே வெறுத்துவிட்டது. இந்த நன்றிகெட்ட பதர்களிடமிருந்து நாம் கண்காணாமல் எங்காவது போய் விடுவோம். வனவிலங்குகளால் நாம் கொல்லப்பட்டால் அதுதான் திரு அல்லாவின் விருப்பம் போலும் என்றெண்ணி மாண்டு போவோம்” என்றார் ஷாரியர். தம்பி ஷாஜமான் ஏதும் மறுமொழி கூறவில்லை. பின்னர் சகோதரர்கள் இருவரும் ஒரு சுரங்கப்பாதை வழியாய்ப் புறப்பட்டு அரண்மனைக்கு வெளியே வந்து கானகம் நோக்கிப் புறப்பட்டு விட்டனர். அன்று பகற்பொழுதெல்லாம் வன வனாந்தரங்களில் ஏழைப் பக்கிர்களைப்போல் அலைந்தனர். திரிந்தனர். பொழுது சாயும் நேரம்; இருள் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இருவரும் கடற்கரை ஓரத்தில் இருந்தனர். வழி நடையால் மிகவும் களைப்படைந்திருந்தார் மூத்தவர் ஷாரியர். ஆகவே இளையவன் ஷாஜமான் “நாம் இன்றைய இரவுப் பொழுதை இங்கேயே கழித்து, விடிந்ததும் வேறிடம் செல்லலாம்” என்றான்; ஷாரியரும் சம்மதித்தார். இருவரும் குளுமையான கடற்காற்றை அனுபவித்த வாறு கடற்கரை மணலில் உட்கார்ந்திருந்தனர். பெரியவர் ஷாரியர் பகலெல்லாம் அலைந்த வழிக் களைப்பால் அப்படியே மணலில் சாய்ந்தார். இளையவன் ஷாஜமான் மட்டும் கடலை நோக்கியவாறு உட்கார்ந்து கொண்டிருந்தான். அந்தி நேரமானதால் கடற் பறவைகள் நிலத்தை நோக்கிச் சாரிசாரியாய் பறந்து சென்று கொண்டிருந்தன.